Feelings of a carrying mother - A beautiful poem in Tamil


In this article I would like to share my feelings as a carrying mother. How she expects her baby?How she shows her love for the child right from the first day of maternity. Read the poem and share your comments. beautiful

The poem I presented here is not merely a poem but my feelings and experience that I would like to present in the form of poetry in our beautiful Tamil words. When I wrote and read this poem I feel no other language can express a mothers love to such an extent But TAMIL.

உயிரோடு உயிராக – தாய்மையின் உணர்வுகள் சொல்லும் கவிதை




எனக்காக வந்த புது உறவு நீ
என் உணர்வுகளின் உயிர் நீ !

உனது அங்க அடையாளங்கள் ஏதுமின்றி
பார்க்காமலே காதலிக்கிறேன் உன்னை !

நித்தமும் உன் நினைவிலே நனைகிறேன்
நித்திரையில் கூட பூரித்து போகிறேன் !

உனது தீண்டல்களின் ஸ்பரிசங்களின்
உள்ளம தொலைந்து போகிறேன் !

என் நாடி துடிப்பிற்குள் நுழைந்து
நாளமெல்லாம் பரவிக் கிடக்கிறாய்!

சுமப்பதில்கூட இவ்வளவு சுகமா ? ஆம்!
சுகம்தான் நீயும் உன் நினைவுகளும் !

கனவுகளோடு காத்திருக்கிறேன் !
உன்னை அள்ளிக்கொள்ள !
உன்னை அணைத்துக்கொள்ள !
உன்னை தாங்கிக்கொள்ள!
உன்னை ஏந்திக்கொள்ள !

உன்னை உயிரில் பொத்தி வைத்து ...
உணர்வுகளில் கட்டிவைத்து ...
காத்திருக்கிறேன் உனக்காக ...
- " உன் அம்மா "

--------------------------------------------------------

With Regards
Suganya


Comments

No responses found. Be the first to comment...


  • Do not include your name, "with regards" etc in the comment. Write detailed comment, relevant to the topic.
  • No HTML formatting and links to other web sites are allowed.
  • This is a strictly moderated site. Absolutely no spam allowed.
  • Name:
    Email: